உடலை ஆரோக்கியமாக்கும் பொங்கல்: நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?

Loading...

உடலை ஆரோக்கியமாக்கும் பொங்கல்  நன்மைகள் தெரியுமா உங்களுக்குதமிழர் திருவிழா நாளான பொங்கலன்று பயன்படுத்தப்படும் கரும்பு, மஞ்சள், இஞ்சி, கூரைப் பூ என அனைத்திலுமே மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தலையாயது பொங்கல், இந்நாளில் மஞ்சள், கரும்பு வைத்து புது அரிசியில் பொங்கலிட்டு கடவுளுக்கு படைப்பார்கள், வீடுகளின் கூரைகளிலும் கூரைப் பூ சொருகப்படும்.

இதை ஏதோ ஒரு சம்பிரதாயமாக செய்து வந்தாலும், ஒவ்வொன்றிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

* பற்களுக்கு வலிமையை சேர்ப்பதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது, இதனை கடித்து சாப்பிடும் போது பற்கள் சுத்தமாவதுடன், செரிமானத் தன்மை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி கடித்து சாப்பிடுவது பற்களுக்கு சிறந்த பயிற்சியாகும்.

* கரும்புச்சாற்றில் கால்சியம், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன, உடல் சூட்டை தணித்து உடனடியாக ஆற்றலை தரக்கூடியது.

* பொங்கலில் முக்கிய இடம்பிடிப்பது வெல்லம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல் வெல்லத்தை அளவோடு உட்கொண்டு வயிற்றுபுண்களுக்கு மருந்தாகிறது.

உணவு அருந்திய பின் சிறிது வெல்லத்தை சாப்பிட்டால் செரிமானத்தை தூண்டுவிடுகிறது, இதில் கனிமச்சத்து, புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளது.

* சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சியின் பயன்களை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.

மஞ்சளில் இருக்கும் Curcumin என்ற பொருள் புற்றுநோய், வாதநோய்களை தடுக்கிறது, மிகச்சிறந்த கிருமிநாசினியாகும்.

வயிறு, குடல் சார்ந்த பிரச்னைகள், இருமல், சளிக்கு இஞ்சி சூப்பரான மருந்தாகும்.

* மா இலை காற்றுமண்டலத்தில் ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும், வேம்பு இலை நோய் எதிர்ப்புதன்மை கொண்டது, கொசுக்களை தடுக்கும்.

* வேப்பிலை, மா இலையை கொண்டு மஞ்சள் கலந்த நீரை தெளித்தால் கிருமிகள் முற்றிலும் அழிந்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

* கூரைப்பூ(கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும், சீரான சிறுநீர் போக்கு ஏற்படுத்தும், விஷமுறிவுக்கு உதவும்.

* ஆவாரை பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டோ என்ற முன்னோர் மொழிக்கேற்ப ஆவாரம்பூ, சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும்.

* தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும்.

* பிரண்டை வயிற்றுப்புண் நீக்கும், செரிமானத்திற்கு உகந்தது, இதிலுள்ள சுண்ணாம்புச்சத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

இவ்வாறு பல்வேறு மருத்துவகுணங்கள் அடங்கிய பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply