உங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன? இதோ காட்டிக்கொடுக்கும் நகங்கள்

Loading...

உங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன இதோ காட்டிக்கொடுக்கும் நகங்கள்நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.
இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக வளர்கிறது.
நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு.
இதில், மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயப்பகுதியை போன்றது. இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கின்றன.
மேட்ரிக்ஸ் பாதித்தால், தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். வெளிபுற நகங்களாக இருக்கும், நெயில் பிளேட் கழிவுபொருள் என்பதால், அது வளர ஆக்ஸிஜன் தேவையில்லை.
ஆனால், உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு, ஆக்ஸிஜன் அவசியம்.
இது, சுவாசிப்பதன் மூலம் பெறும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. இதில், கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில், 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே, நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றுகின்றன. நகங்கள் நமது உடலின் நிலையை வெளிகாட்டும் மானிட்டர் போல செயல்படுகின்றன.
நகங்கள், விரலுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தை கொண்ட நகங்கள், விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply