ஈஸி பெப்பர் சிக்கன்

Loading...

ஈஸி பெப்பர் சிக்கன்சிக்கன் – அரைக் கிலோ
தயிர் – அரை கப்
மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
இஞ்சி – சிறு துண்டு
மல்லி தூள் – அரை தேக்கரண்டி
சீரகத் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி

சுத்தம் செய்த‌ சிக்கனுடன் தயிர், மிளகு தூள், மஞ்சள் தூள், தேவையான‌ உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற‌ விடவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்கவும்.

அதனுடன் பொடியாக‌ நறுக்கிய சிறு துண்டு இஞ்சி மற்றும் 10 பல் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் மல்லி தூள், சீரகத்தூள், மிளகாய் தூள் தேவைப்படின் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும். (ஊற‌ வைக்கும் போதே உப்பு சேர்த்துள்ளதால் பார்த்து கொஞ்சமாக‌ சேர்க்கவும்.)

இதனுடன் இரு கைப்பிடி தண்ணீர் தெளித்து கிளறி கொண்டே இருக்கவும்.

தண்ணீர் சுண்டியதும் ஊற‌ வைத்த‌ சிக்கனை சேர்க்கவும். இதை நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் வேக‌ விடவும். சிக்கன் தண்ணீர் விடும் என்பதால் மேலும் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

10 முதல் 15 நிமிடம் கழித்து சிக்கன் நன்கு வெந்ததும் மிளகு தூள் தூவி இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான பெப்பர் சிக்கன் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply