இளமை தோற்றம் தரும் விளாம்பழம்

Loading...

இளமை தோற்றம் தரும் விளாம்பழம்வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்தச் சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். கவலைப்படாதீர்கள், விளாம்பழம் இருக்க வேதனை ஏன்?

* இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் `மாஸ்க்’ போல போடுங்கள். விளாம்பழ விழுது எவ்வளவு நேரமானாலும் உலராது என்பதால், சிறிது நேரத்தில் நீங்களாகவே கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையைத் தினமும் காலையில் செய்தால் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும் உங்கள் முகம்.

* ரோஸ் வாட்டார் – 1 டீஸ்பூன், லவங்க தைலம் – 3 துளி, சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை, விளாம்பழ சதை 2 டீஸ்பூன், இவற்றைக் கலந்து முகத்தில் பூசி, மெதுவாக மசாஜ் செய்ய, ஒளியிலே தெரியும் தேவதையே தான் நீங்கள்!

* குழந்தையைப் போன்ற மென்மையான சருமத்தை விரும்பாதவர்கள் யார்? விளாம்பழத்தில் அதற்கான ரகசியம் இருக்கிறது. விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வையுங்கள். இதனுடன். பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு காய்ந்த ரோஜா மொட்டு, எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதை குளியல் பவுடராக பயன்படுத்தினால், முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும்புள்ளிகளும் காணாமல் போகும். சருமப் பொலிவுடன் கேச ஆரோக்கியத்துக்கும் வழி சொல்கிறது விளாம்பழம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply