இலக்கை தவிடு பொடியாக்கும் டிரோன்

Loading...

இலக்கை தவிடு பொடியாக்கும் டிரோன்டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் உளவு வேலைக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா இவ்வகை உளவு விமானங்களை வைத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.
மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள ஐ,எஸ் தீவிரவாதிகளை தாக்கவும் அமெரிக்கா இந்த வகை ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகிறது. இதனால் இராணுவ வீரர்கள் உயிரிழப்பை தடுக்க முடிகிறது.
சில சமயம் மேலே பறக்கும் போது உண்டாகும் சத்தத்தால் தீவிரவாதிகள் உஷாராகி விடுகின்றனர். இதனையடுத்து அமெரிக்கா அதிநவீன டிரோன்களை தயாரிக்க ஆரம்பித்தது.
அதை பற்றி கவலைப்படாத ஈரான் போன்ற நாடுகள் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தி அதன் தொழிநுட்பங்களை கற்று அமெரிக்காவிற்கே பதிலடி கொடுக்கும் வகையில் புதிய டிரோன்களை வடிமைக்கிறது.
தற்போது அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளை எச்சரிக்கும் வகையில், செங்குத்தாக ஏறி இறங்கும் அதிநவீன டிரோனை ஈரான் தயாரித்துள்ளது. இது நின்ற இடத்தில் இருந்து அப்படியே செங்குத்தாக பறக்கும். செங்குத்தாக தரை இறங்கும். இதனால் நினைத்த இடத்தில் திடீரென தாக்குதல் நடத்த முடியும்.
உலகிலேயே இதுபோன்ற டிரோன் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை என்று டிரோன் திட்ட ஆராய்ச்சியாளர் அப்பாஸ் ஜாம் தெரிவித்திருந்தார்.
டிரோன்கள் போதுவாக எடை குறைந்த ஒளி ஊடுரும் பொருட்களால் செய்யப்படுகிறது. இவை விமானத்திற்கு எளிதாக பறக்கும் தன்மையை கொடுக்கிறது.
இது எப்போதும் தன்னுடன் infra-red cameras, Global Positioning Systems (GPS), laser or GPS guided missiles ஆகியவற்றை கொண்டிருக்கும். இது தேவையற்ற சிறிய அசைவையும் பதிவு செய்யும்.
பல வகை வடிவங்களில் உருவாக்கப்படும் இவ்வகை ட்ரோன்கள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வேலையை programmers செய்கின்றனர்.
டிரோன்களால் சேகரிக்கப்படும் தகவல்கள் செயற்கைக்கோளுக்கு அனுப்பட்டு பின்னர் அவை கட்டுப்பாட்டு மையத்தை வந்து சேர்கிறது. மறைந்திருந்து தாக்கும் வண்ணம் செயல்படும் இவை மேகங்களுக்கு மேல் சத்தமின்றி பறக்கின்றன. இவ்வகை அம்சங்களை கொண்ட ட்ரோனின் விலை 50 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
பயங்கர அழிவை உண்டாக்கும் இந்த வகையான டிரோன்கள் தீவிரவாதிகளை தேடித் தேடி ஏவுகணைகளால் தாக்கும் வல்லமை கொண்டது. அமெரிக்கா தனது தாக்குதலுக்கு MQ-9 Reaper, MQ-1B Predator என்ற இரண்டு வகை டிரோன்களை பயன்படுத்துகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply