இறால் பர்கர்

Loading...

இறால் பர்கர்
தேவையானவை:
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 2, முட்டை – ஒன்று, மைதா – கால் கப், வேகவைத்து உலர்த்தி ஒன்றிரண்டாக அரைத்த இறால் – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல் (விழுதாக அரைக்கவும்), எலுமிச்சை சாறு/வினிகர் – 2 டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பர்கர் பன் – 4, முட்டைகோஸ் இலை/லெட்யூஸ் இலை – 4, வெங்காயம், தக்காளி (வட்டமாக நறுக்கியது) – தலா 2, எண்ணெய், உப்பு, ரஸ்க் பொடி – தேவைக்கேற்ப.


செய்முறை:
உருளைக்கிழங்கு, மைதா, இறால், மிளகாய்த்தூள், பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு/வினிகர், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகுத்தூள், தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி பிசைந்துகொள்ளவும். பிசைந்த கலவையுடன் ரஸ்க் பொடி சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, பின்பு வட்டமான பேட்டி (பார்ப்பதற்கு கட்லெட் போல இருக்கும். ஆனால், பர்கரின் உள்ளே வைப்பதால் இதற்கு பேட்டி என்று பெயர்) செய்து கொள்ளவும்.

தோசைக்கல் அல்லது ஃப்ரை பேனில் சிறிது எண்ணெய் விட்டு மிதமான தீயில் கட்லெட்களை நன்றாக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். பன்னை இரண்டு வட்டங்களாக குறுக்கே வெட்டிக்கொள்ளவும். கீழ்ப்பகுதி பர்கர் பன் மீது முட்டைகோஸ்/லெட்யூஸ் இலையைப் பரப்பி, அதன் மீது வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கவும். இதன் மீது ‘பேட்டி’யை வைத்து, சிறிது மிளகுத்தூள், சிறிது உப்பை அதன் மீது தூவி, பர்கர் பன்னின் மற்றொரு பகுதியை மேலே வைத்து மெதுவாக அழுத்தவும். தேவையென்றால் ஒரு பல்குத்தும் குச்சியால் நடுவில் மேலிருந்து கீழாக செருகவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply