இனிப்பு அப்பம்

Loading...

இனிப்பு அப்பம்
தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், பொடித்த வெல்லம் – ஒன்றேகால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:
பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். வெல்லத்துடன் அரை கப் நீர் சேர்த்து சூடாக்கி, கரைந்ததும் வடிகட்டவும்.
ஊறிய அரிசி, பருப்புகளுடன் தேங்காய் சேர்த்து நைஸாக அரைக்கவும். அதனுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கரைத்த மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊற்றி, இருபுறமும் திருப்பி விட்டு, வெந்தபின் எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply