ஆலு வெஜ் பர்கர்

Loading...

ஆலு வெஜ் பர்கர்

தேவையானவை:

வட்டமான பன் – 4, உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து மசிக்கவும்), வெங்காயம் – 2, கேரட், பீன்ஸ், கோஸ் (பொடியாக நறுக்கவும்), பச்சைப் பட்டாணி எல்லாம் சேர்த்து – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், மைதா – கால் கப், பிரெட் தூள் அல்லது ரஸ்க் தூள் – ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, தக்காளி சாஸ், சில்லி சாஸ் – சிறிதளவு.செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மசித்த உருளையைச் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையை சிறிய உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும்.
மைதாவுடன் சிறிது நீர் சேர்த்து நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒவ்வொரு உருண்டையையும் வட்டமாக தட்டி, கரைத்த மைதாவில் தோய்த்து, பிரெட் அல்லது ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பன்னை, வட்டவடிவில் இரண்டாக ‘கட்’ செய்து மேல் பாகத்தில் தக்காளி சாஸ்… கீழ் பாகத்தில் சில்லி சாஸ் தடவி, பொரித்த கட்லெட்டுகளை அதில் ஸ்டஃப் செய்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply