ஆலு அல்வா

Loading...

ஆலு அல்வாதேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 200 கிராம், மில்க்மெய்ட் – 2 டீஸ்பூன், பால்கோவா – 50 கிராம், சர்க்கரை – 100 கிராம், வறுத்த முந்திரி, உலர் திராட்சை – சிறிதளவு, நெய் – 100 கிராம், பச்சைக் கற்பூரம் (பொடித்தது) – துளி அளவு.

செய்முறை:சர்க்கரையில் சிறிது நீர்விட்டு காய்ச்சி… இளகி முத்து கொதி வருகையில் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்), மசித்த உருளைக்கிழங்கு, பால் கோவா உதிர்த்து சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்துக்கொண்டே கிளறவும். அல்வா பதம் வரும்போது மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, மீண்டும் கிளறி… வறுத்த முந்திரி, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம் சேர்த்தால்… சப்புக் கொட்ட வைக்கும் சுவையில் ஆலு அல்வா தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply