ஆர்யாவை வியக்க வைத்த ஸ்ரீதிவ்யா

Loading...

ஆர்யாவை வியக்க வைத்த ஸ்ரீதிவ்யா

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, ராய் லட்சுமி, பார்வதி மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பொம்மரில்லு பாஸ்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ரேகா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா, எடிட்டர் மோகன், இயக்குனர் மோகன் ராஜா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

இதற்குமுன் ஸ்ரீதிவ்யா கலந்து கொண்ட படவிழாக்களிலும், பல பேட்டிகளிலும் இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு மேல் பேசியது இல்லையாம். ஆனால், இந்த விழாவில் ஸ்ரீதிவ்யா பெரிய பேப்பரில் எழுதி வைத்து பலரை பற்றியும் சிறப்பாக பேசியிருக்கிறார்.

ஸ்ரீதிவ்யாவின் இந்த பேச்சை கேட்ட ஆர்யா, இதுவரை ஸ்ரீதிவ்யா இப்படி பேசி பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் படப்பிடிப்புகளில் கூட ஸ்ரீதிவ்யா இந்த அளவிற்கு பேசியதில்லை. இவர் இப்படி பேசியது எனக்கு வியப்பாக இருக்கிறது என்றார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply