ஆம்பூர் பிரியாணி

Loading...

ஆம்பூர் பிரியாணி
சமையலுக்கு தேவையான பொருட்கள்:

அரிசி – ஒரு கிலோ
ஆட்டுக்கறி – ஒரு கிலோ
வெங்காயம் – கால் கிலோ
இஞ்சி – 250 கிராம்
பூண்டு – 150 கிராம்
பச்சைமிளகாய் – 10 அல்லது 8
தக்காளி – அரை கிலோ
மல்லி இலை – ஒரு சிறிய கட்டு புதினா – ஒரு சிறிய கட்டு
தயிர் – ஒன்றரை கப்
எலுமிச்சம்பழம் – ஒன்று
நெய் – 100 கிராம்
எண்ணெய் – கால் லிட்டர்
பட்டை, ஏலக்காய், கிராம்பு – 5 கிராம்
பிரியாணி இலை, பிரியாணி பூ – இரண்டு
மஞ்சள்தூள் – ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
முன் கூட்டியே தயார் செய்து வைக்க வேண்டியவைகள்
* பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றில் பாதியை நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
* ஆட்டுக்கறியைக் கழுவி தேவையான அளவில் பீஸாக்கி வைத்துக் கொள்ளவும்.
* இஞ்சியையும் பூண்டையும் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* அரிசியை நீரில் ஊற வைக்கவும்.

செய்முறை :

* பிரியாணி சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் நெய்யில் முக்கால் பாகம், எண்ணை முழுவதையும் ஊற்றி சூடானதும் மீதமிருக்கும் பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சூடான எண்ணெயில் போட்டு சட்டியை மூடிவிடவும்.

* சிறிது நேர இடைவெளிவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், அரைத்து வைத்துள்ள இஞ்சிபூண்டு விழுது, தக்காளி, மல்லி இலை, புதினா ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக அதில் போட்டு வதக்கவும்.
* பின்னர் தயிரை ஊற்றி மஞ்சள்தூள், மிளகாய்தூள், பொடித்து வைத்துள்ள கரம் மஸாலா அனைத்தையும் போட்டு வதக்கவும்.
* எண்ணெய் மேலே பிரிந்து வரும்போது கறியைப் போட்டு வதக்கவும். தீயை குறைத்து வைத்து மஸாலாவிலேயே கறி நன்றாக வேகும்படி செய்யவும்.
* கறி நன்றாக வெந்து வரும்போது அரிசியின் அளவில் ஒன்றுக்கு ஒன்றரை வீதம் தண்ணீர் ஊற்றி, அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து, ஊறவைத்துள்ள அரிசியும், போட்டு தேவையான அளவு உப்பு போட்டு மூடிவிடவும்.
* கறி, அரிசி, மஸாலா எல்லாம் சேர்ந்து வரும்போது ஒருமுறை கிளறி மூடவும். மீண்டும் தீயை சிறிதாக்கிக் கொள்ளவும். இறுதியாக வைத்துள்ள கால்பாகம் நெய்யை ஊற்றி சமப்படுத்தி மூடவும்.
* பிறகு ஒரு சட்டியில் தண்ணீரை முக்கால் பாகம் நிரப்பி பிரியாணி சட்டியின்மேல் வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.
சுவையான ஆம்பூர் பிரியாணி தயார்.
குறிப்பு : ஆம்பூர் பிரியாணியின் தனித்துவமே கறியை மஸாலாவில் வேகவிடுவது தான். குக்கரில் வேகவைக்க கூடாது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply