ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி | Tamil Serial Today Org

ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி

Loading...

ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி

தேவையானவை:
கடலை மாவு – 100 கிராம், ஆப்பிள் (மீடியம் சைஸ்) – ஒன்று, அரிசி மாவு – 20 கிராம், சர்க்கரை – 2 டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 300 கிராம், உப்பு – சிறிதளவு.


செய்முறை:
ஆப்பிளை ஒரு இன்ச் கனத்துக்கு வட்டமாக நறுக்கி விதை நீக்கவும். சர்க்கரையை சிறிதளவு வெந்நீர் விட்டுக் கரைத்து ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சர்க்கரை நீர், சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். ஆப்பிள் துண்டுகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN