ஆப்பிள் பேஸ் பேக்

Loading...

ஆப்பிள் பேஸ் பேக்* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பளபளப்பாக மாறுவதை காணலாம்.

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, இந்த கலவையை பஞ்சில் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

* ஆப்பிள் விழுது 1 ஸ்பூன் எடுத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 15 ஊற வைத்து பின் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக மறைவும்.

* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டு போல் இருக்கும்.

* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகவும், நீளமாகவும் வளரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply