ஆப்பிள் பாயசம்

Loading...

ஆப்பிள் பாயசம்
தேவையானவை:
ஆப்பிள் – 2 (மீடியம் சைஸ் – தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கவும்), பால் – 4 கப், சர்க்கரை – ஒரு கப், கோவா – கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்), நெய் – 2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் – கால் கப், முந்திரி – 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்தது), வெனிலா எசன்ஸ் – ஒரு துளி.


செய்முறை:
வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு… பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply