ஆண்மைக் குறைபாடு பற்றிய சில உண்மைகள்

Loading...

ஆண்மைக் குறைபாடு பற்றிய சில உண்மைகள்ஓர் ஆணை மிகவும் நிலைகுலைந்து போக செய்வது ஆண்மைக் குறைபாடு தான். லேப்டாப், மொபைல் பயன்படுத்துவது, மன அழுத்தம், உடல் எடை என பலவன ஆண்மைக் குறைபாட்டிற்கு காரணம் என்று பரவலாக கூறிவருகிறார்கள்.

ஆனால், இதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. நிறைய ஆண்கள் குழந்தை பேறு இன்மைக்கு பெண்கள் தான் பெருமளவு காரணம். இதற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கருதுகிறார்கள். ஆனால் 40% ஆண்களுக்கு தான் இது சார்ந்த குறைபாடுகள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு ஆயிரம் ஆயிரம் பரிசோதனைகள் இருப்பினும்.

ஆண்கள் விந்தணு சார்ந்த ஓர் பரிசோதனையில் கூட ஈடுபடுவதில்லை. சிலர் விதைப்பையை குளுமைப்படுத்துவதால் விந்தணு திறன் அதிகரிக்கும் என எண்ணுகிறார்கள். ஆனால், இது உண்மை அல்ல, இதனால் எந்த பயனும் அடைய முடியாது. மற்றும் விந்தணு உற்பத்தி சீராக இருக்க நீங்கள் இறுக்கமான உள்ளாடை உடுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.

ஆண்மைக் குறைபாடு என்பது வயதானால் தான் ஏற்படும் என்றில்லை. விந்தணு உற்பத்தி குறைபாடு அல்லது எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களினால் 20 வயது ஆண்களுக்கு கூட ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம். புகை மற்றும் குடி ஆகிய பழக்கங்கள் விந்தணுவில் நச்சுத்தன்மையை அதிகரித்து, திறன் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் சி, ஜிங்க், செலினியம், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் போன்றவை விந்தணு உற்பத்திக்கு உதவுகின்றன. உடல் எடை ஆண்களின் ஆண்மையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பது பொய். BMI எனப்படும் உடல் எடை அளவு கோளில் 20 – 25 எனும் அளவில் இருப்பவர்களுக்கு நல்ல விந்தணு உற்பத்தி இருக்கிறது, இதுவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது குறைவு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply