அழகுக்கும் இளமைக்கும் ‘ஃபேஸ் மாஸ்க்’

Loading...

அழகுக்கும் இளமைக்கும் 'ஃபேஸ் மாஸ்க்'முகத்தை அழகாகவும், இளமையாகவும் வைத்திருக்க “மாஸ்க்” மிக முக்கியமானது. இது முகப் பொலிவைக் கொண்டு வருவதுடன் ஒரு வெளிப்படையான நிற மாறுதலையும் கொண்டு வரும்.

அது மட்டுமில்லாமல் உங்கள் முகத்தில் ஒரு மென்மையையும் புத்துயிரையும் கொடுக்கும். இதனை சரியாக மற்றும் பொருத்தமான அளவில் பயன்படுத்துவதால் முகத்தில் தெரியும் குறைகள் நீங்குகின்றன.

மார்க்கெட்டில் ஏராள “மாஸ்க்” வகைகள் உள்ளன. உங்கள் முகத்தைப் பொறுத்து பொருத்தமான “மாஸ்க்”கை தேர்ந்தெடுத்து அதையே கடைசி வரை கடைபிடிக்கவும். நீங்கள் விரும்பினால் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே மாஸ்க்கை தயாரிக்கலாம்.


சொர சொரப்பான சருமத்திற்கு

முட்டையின் மஞ்சள் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் கலந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி பால் பவுடர் போட்டு கலந்து “பேஸ்ட்’ மாதிரி உருவாக்கி முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.


பிசுபிசுப்பான (எண்ணெய்ப் பசை) சருமத்திற்கு

முட்டையின் வெள்ளைக் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் கலந்து அதில் பாதி தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” மாதிரி செய்து கொண்டு முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை நீரால் கழுவிக் கொள்ளவும்.


ஆழமான துளைகள் கொண்ட சருமத்திற்கு

சோள மாவுடன் பால் கலந்து அடிதல் சிறிது எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும். மூல்தானி மிட்டி ஒரு “மாஸ்க்’காக பயன்படுகிறது. எண்ணெய் பிசுபிசுப்பு முகம் மற்றும் காம்பினேஷன் முகத்திற்கும் இதை பயன்படுத்தலாம்.


கருப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு

முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.


எல்லாவித சருமத்திற்கும்

வெள்ளரி பேஸ்ட்டை செய்து முழு முகத்திலும் தடவவும். வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.


மாஸ்க் தடவும் முறை

முடியை கெட்டியாக முடிந்து கொள்ளவும். தூய்மையான நீரைக் கொண்டு நன்றாக முகத்தைக் கழுவிக் கொள்ளவும். அகன்ற பாத்திரம் மற்றும் மிருதுவான பிரஷ்ஷை உபயோகிக்கவும். “மாஸ்” கை முகத்தின் மென்மையான பாகங்களான கண்களின் ஓரம், இமைகள் மற்றும் உதடுகள் ஆகியவற்றில் தடவுவதை தவிர்க்கவும்.

“மாஸ்க்” தடவிய பிறகு குறைந்தது அரை மணி நேரம் காய வைக்கவும். “மாஸ்கை” அகற்றும் போது கவனத்துடன் அகற்றவும். மீண்டும் தூய்மையான நீரால் நன்றாக முகத்தைத் துடைத்துக் கழுவவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply