அரைத்த மாவு பஜ்ஜி

Loading...

அரைத்த மாவு பஜ்ஜி

தேவையானவை:
கடலைப்பருப்பு – 100 கிராம், பச்சரிசி – 20 கிராம், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயம் – சிறு துண்டு (பொடிக்கவும்), மெல்லிய சதுரங்களாக நறுக்கிய சேனைக்கிழங்கு – 10 அல்லது 15 துண்டுகள், புளிக்கரைசல் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
கடலைப்பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாயை ஒன்று சேர்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு நைஸாக அரைத்து எடுக்கவும். சேனைக்கிழங்கு வில்லைகளை புளிக்கரைசல், சிறிது உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் வேகவிட்டு, நீரை வடிகட்டவும். இந்த வில்லைகளை அரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply