அப்பள பஜ்ஜி

Loading...

அப்பள பஜ்ஜி
தேவையானவை:
உளுந்து அப்பளம் அல்லது மிளகு அப்பளம் – 4, கடலை மாவு – 100 கிராம், அரிசி மாவு – 20 கிராம், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சமையல் சோடா- ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள், உப்பு – சிறிதளவு, எண்ணெய் – 300 கிராம்.

செய்முறை:
ஒவ்வொரு அப்பளத்தை யும் நான்காக கட் செய்துகொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதில் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் விட்டுக் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். அப்பளத் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:
அப்பளத்தில் உப்பு இருக்கும் என்பதால், கவனமாக சற்று குறைவான உப்பை மாவில் சேர்க்கவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply