அன்னாசி கேசரி

Loading...

அன்னாசி கேசரி
தேவையானவை:
அன்னாசிப் பழம் – ஒரு சிறு துண்டு, (தோல், முள் நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும்), ரவை – ஒரு கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 கப், பால் – ஒரு கப், முந்திரி – 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), யெல்லோ ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், அன்னாசி எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:
பொடியாக நறுக்கிய அன்னாசி துண்டுகளுடன் சர்க்கரையைக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ரவையை கொஞ்சம் நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வாணலியில் பால், 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, யெல்லோ ஃபுட் கலரை சேர்க்கவும். நன்கு கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து, கட்டித் தட்டாமல் நன்கு கிளறி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து வேகவிடவும். வெந்ததும் அன்னாசி – சர்க்கரை கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். கலவை சற்று கெட்டியானதும், பொடித்த முந்திரி, அன்னாசி எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply