அனைத்து விதமான விஷக்கடிகளையும் குணப்படுத்தும் ஈச்சுர மூலி

Loading...

அனைத்து விதமான விஷக்கடிகளையும் குணப்படுத்தும் ஈச்சுர மூலிநம் மக்களிடம் அதிகபடியாக பாதித்து வரும் விஷகடி, சருநோய் பெருவியாதி இப்படிப்பட்ட வியாதிகளுக்கு பாதித்து தீர்வு இல்லாமல் மரணத்திற்கு ஆள் ஆகிறார்கள். கிராமபுற மக்கள் விஷகடியால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
காரணம் விவசாயிகள், மலைவாழ் மக்கள், வயல் வேலை, தோட்ட வேலை செய்யும் கூலி தொழிலாளிகள் இவர்களுக்கு விஷமுள்ள பாம்புகள், தேள், நட்டுவாகிளி, வண்டுகள், சிலந்தி, செய்யான் பூரான் ஆகிய அனைத்து வித விஷ கடிகளுக்கு நம் பழங்காலங்களில் வாழ்ந்த சித்தர்கள் கூறிய அற்புத மூலிகையானதுதான் ஈச்சுர மூலி ஆகும். இதற்கு மாற்று பெயர்கள், பெருமருந்து கொடி, தலை அருளி, உரிக்காய் கொடி என்றும் பெயர்கள் உண்டு நம் பழங்குடி இருளர்கள் அவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இதன் வேர்கட்டையை உரைத்து நாக்கில் தடவி விடுவார்கள்.
இப்படி சில தினங்கள் குழந்தைகளுக்கு தர அவர்களுக்கு விஷகடி சரும வியாதி பற்று போன்ற பெருவியாதிகள் தாக்காமல் இருக்க அவர்கள் இதனை பயப்டுத்தி நோய் இன்றி வாழ்ந்து இருக்கிறார்கள். ஈச்சுர மூலியால் விஷ சோபை, வீக்கம், சந்திபல விஷங்கள், உடல்வெளுப்பு, புண்ரீக குஷ்டம், இருதய ரோகம் பித்த சோபம், இருமல், சுரரோகம், சரீரக்குத்தல், வாத தோஷம், நமைக்கிரந்தி, மேகப்படை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் இம்மூலிகை மிகவும் அற்புதமானது.
இறைவன் நமக்காக இயற்கையில் படைத்த அற்புத மூலிகை ஆகும் இது அதற்குதான் இம்மூலிகை சித்தகள் பெருமந்ந்து என்று இம்மூலிகையை மட்டும்தான் கூறியுள்ளார்கள். இம்மூலிகை பயன்: இதன் சமூலம் என்று சொல்லப்படும் இலை, வேர், காய், பூ ஆகிய அனைத்தும் சமூலம் என்று பெயர் இதன் பூவன் அமைப்பு சரும வியாதிகளுக்கு மேல் பூசாக மஞ்சளுடன் அரைத்து பூசு அரிப்பு படைகள் குணமாகும்.
சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெயில் காய்ச்சி இதனுடன், தும்பை, அவுரி, ஊசிதகரை, வண்டு கொல்லி, மருதாணி, பூலான்கிழங்கு, கார்போக அரிசி, கோரைகிழங்கு, கலப்பை கிழங்கு, வெட்டி வேர், வேப்ப வித்து, திரிபலா இலைகளை எண்ணையில் இட்டு காய்ச்சி மேல் பூசாக தடவி வர சரும நோய்கள் தீரும்.
விஷகடிகளுக்கு ஈச்சுர மூலி, மிளகு, தும்பை, நீலி இலை இவைகளை சூரணம் செய்து வீட்டில் வைத்து கொள்ள வேண்டும் இம்மருந்து உயிர்காக்கும் ஓர் அற்புத மருந்தாகும். திடீர் என பாம்பு தேள் போன்ற விஷகடி கடித்தவர்களுக்கு பெரியவர்களுக்கு 1 ஸ்பூன் சிறியவர்களுக்கு, டீஸ்பூன் வீதம் மருந்தை சுடுநீரில் கலந்து தர சலக விஷகடிகளில் இருந்து மக்களை காப்பாற்றி விடலாம் கடிவாய்ப்பட்ட இடத்திலும் இம்மருந்தை சுடுநீரில் குழைத்து பற்றாக பூசவும். விஷநீர்களை எடுத்துவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply