அஜித், விஜய் வரிசையில் அதர்வா: ஏ.ஆர்.முருகதாஸ்

Loading...

அஜித், விஜய் வரிசையில் அதர்வா: ஏ.ஆர்.முருகதாஸ்

அதர்வா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கணிதன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் படத்தின் இயக்குனர் சந்தோஷ், நாயகன் அதர்வா, நாயகி கேத்ரின், இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, தயாரிப்பாளர் தாணு, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர்.

இதில் தயாரிப்பாளர் தாணு பேசும்போது, ‘கணிதன் படம் சிறப்பாக வந்திருக்கிறது. முருகதாசின் உதவியாளர் சந்தோஷ், ‘துப்பாக்கி’ படம் உருவாகும் போதே என்னிடம் கதை சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டார். மிகவும் திறமையாக செயல்பட்டு படத்தை இயக்கியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான், இளம் இசையமைப்பாளர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அதனால் தான் நிறைய படங்களில் ஒப்பந்தமாகாமல் வருடத்திற்கு ஒரு படம் என்று ஒப்பந்தமாகி வருகிறார்’ என்றார்.

முருகதாஸ் பேசும்போது, ‘தயாரிப்பாளர் தாணு, நிறைய இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். சங்கரின் உதவியாளர் அட்லி படத்தை தயாரித்து வருகிறார். என்னுடைய உதவியாளர் சந்தோஷுக்கு ‘கணிதன்’ படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

இவர் தயாரிப்பில் நான் இயக்கிய ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக தாணு இருந்திருக்கிறார். அதுபோல், ‘கத்தி’ படம் பிரச்சனையில் இருக்கும் போது, அதை ரிலீஸ் செய்ய அதிக ஒத்துழைப்பு கொடுத்தார்.

‘கணிதன்’ படத்தை இயக்கிய சந்தோஷ் என்னுடைய உதவியாளர்களில் மிகவும் சிறந்தவர். திறமையானவர்.

முன்பு நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தவர் நடிகர் முரளி. தற்போது அஜித், விஜய் இருவரும் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் அதர்வாவும் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். இளம் நடிகர்களில் அதர்வா சிறப்பாக வளர்ந்து வருகிறார். அதர்வாவிற்கும் படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply