Instagram இன் அதிரடி நடவடிக்கை

Loading...

Instagram இன் அதிரடி நடவடிக்கைபுகைப்படங்கள் உட்பட சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிரும் தளமான Instagram அண்மையில் 300 மில்லியன் பயனர்களைக் கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மில்லியன் கணக்கான போலியான கணக்குகளை (Fake Account) நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பிலபல்யமானவர்கள் உட்பட பல Instagram பயனர்கள் அதிகளவான பின்தொடர்பவர்களை (Followers) இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் Justin Bieber 3.5 மில்லியன் வரையானவர்களையும், Kim Kardashian 1.3 மில்லியன் வரையானவர்களையும் மற்றும் Beyonce 830,000 வரையானவர்களையும் இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
ads
VTST BN