Huawei Ascend GX1 உத்தியோகபூர்வமாக அறிமுகம்

Loading...

Huawei Ascend GX1 உத்தியோகபூர்வமாக அறிமுகம்Huawei நிறுவனம் Ascend GX1 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
250 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 6 அங்குல அளவு, 1280 x 720 Pixels Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் Android 4.4.4 KitKat இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக்கைப்பேசி 161 x 84.5 x 9.2 mm அளவிடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பனவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN