வாட்ஸ்ஆப் மெசேஜ், படங்களை கூகுளில் சேமிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Loading...

வாட்ஸ்ஆப் மெசேஜ், படங்களை கூகுளில் சேமிக்கும் வசதி விரைவில் அறிமுகம்வாட்ஸ்ஆப் பயனாளிகள், தங்கள் மெசேஜ், புகைப்படங்களை கூகுள் ட்ரைவில் சேமித்துக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
கூகுள் ட்ரைவின் தயாரிப்பு நிர்வாக இயக்குநரான ஸ்காட் ஜான்ஸன் இதுபற்றி தனது வலைப்பக்கத்தில் தெரிவித்து இருப்பது என்னவென்றால், தகவல்கள் அழிந்துபோனால், அவை நினைவுகளாகவே மறைந்துவிடுமே என்று நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆண்டிராய்டில் இயங்கும் ஸ்மார்ட் போன்களின் வாட்ஸ்ஆப் அரட்டை, குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை கூகுள் ட்ரைவில் சேமித்துப் பாதுகாத்துக் கொள்ளலாம். அத்தோடு, வேறொரு புதிய சாதனத்துக்கும் அதை இடமாற்றம் செய்துகொள்ள முடியும். இந்த புதிய வசதி சில மாதங்களில் நடைமுறைக்கு வரும். ஆகவே வாட்ஸ் ஆப் செட்டிங்க்ஸ் பக்கத்தை அடிக்கடி பரிசோதியுங்கள்”என்று தெரிவித்துள்ளார். வாட்ஸ்ஆப் நிறுவனமும் இதே தகவலைப் பகிர்ந்துள்ளது. ‘உங்களின் மெசேஜ்கள் மற்றும் படங்களை, கூகுள் நிறுவனத்தில் சேமித்து வைக்கலாம். உங்களின் செல்பேசி தொலைந்துவிட்டாலோ அல்லது நீங்கள் வேறு ஸ்மார்ட்போனுக்கு மாறினாலோ, உங்களின் சாட் தகவல்கள் பத்திரமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2015-ன் அறிக்கையின்படி, உலக அளவில் 90 கோடி பேர் வாட்ஸ் ஆப் செயலியப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN