மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஸ்மார்ட் கைப்பேசிகள்

Loading...

மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஸ்மார்ட் கைப்பேசிகள்தற்போது அதிகரித்து வரும் ஸ்மார்ட் கைப்பேசி தொழில்நுட்பமானது மூளையின் செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண கைப்பேசிகளை பயன்படுத்தும் 11 பேரையும், ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளை பயன்படுத்தும் 26 பேரையும் வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக மூளையை பரிசோதிப்பதற்கான இலத்திரனியல் தொழில்நுட்பம் (electroencephalography -EEG) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மூளைக்கும் கைகளிற்கும் நரம்புகளினூடாக தகவல் அனுப்பப்படும் விதம் குறித்து ஆராயப்பட்டது.
இவ் ஆய்வின் போது ஸ்மார்ட் கைப்பேசி பயன்படுத்தியவர்கள் பெருவிரல், நடுவிரல் என்பவற்றினை பொறியியல் ரீதியில் பயன்படுத்திய விதம் பிரம்மிக்கத்தக்கதாக இருந்ததாகவும், இது தொடர்பாக தாம் மிகவும் ஆச்சரியப்படுவதாகவும் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் தகவலியலாளரான Arko Ghosh என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...
Rates : 0
VTST BN