பெண்களுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துக்கள் என்ன?

Loading...

பெண்களுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துக்கள் என்னஉடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லையெனில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.
குறிப்பாக பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும், இல்லையெனில், களைப்பு, முதுகுவலி, மூட்டுவலி, இடுப்பு வலி என பல்வேறு வலிகள் ஏற்படும்.

அதுவும் இளம்வயதில், வேலைப்பளு மற்றும் டயட் காரணமாக சில உணவுகளை தவிர்த்துவிடுகிறோம், ஆனால் அப்பருவத்தில் அதன் விளைவு தெரியாவிட்டாலும் வயதான காலத்தில் இதன் தாக்கம் தெரியவரும்.

எனவே பெண்கள் தங்கள் உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மிது அதிக கவனம் செலுத்த வேண்டும்,

கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 ஊட்டச்சத்துக்கள் பெண்களுக்கு கட்டாயம் தேவையானதாகும்.

விட்டமின் ஈ

இது, சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பான், உயிரணுக்களை பாதுகாக்கிறது. போதுமான அளவு விட்டமின் ஈ கிடைக்கவில்லை என்றால், மற்ற சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் பிரச்னை ஏற்படுகிறது.

விட்டமின் ஈ நிறைந்த உணவுகள்

பசலைக் கீரை, வேர்க்கடலை, பாதாம், ப்ராக்கோலி, சிவப்பு குடைமிளகாய், பிஸ்தா, மிளகாய் தூள்.

பொட்டாசியம்

பொட்டாசியம் ஒரு மின்பகு பொருளாகும். இது, நரம்பு மண்டலம் முனைப்பாக செயல்படவும், தசைகளை நயமாக வைத்து கொள்ளவும் உதவுகிறது. ரத்த அழுத்தத்தை இயல்பான அளவில் வைத்திருக்க உதவுகிறது.

போதுமான பொட்டாசியம் கிடைக்கவில்லை என்றால், எளிதில் களைப்படைவதாக உணர்வோம். இதை தவிர்க்க, நாம் போதுமான அளவு, பொட்டாசியம் நிறைந்த உணவு மற்றும் அளவான சோடியம் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும்.

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

வேக வைத்த தோல் நீக்காத உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடலாம். ஒரு கப் சமைத்த பயறு, பருப்பு சூப் அல்லது கூட்டு செய்து சாப்பிடலாம். தினசரி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதாலும், பொட்டாசியத்தை பெற முடியும்.

இதுதவிர, பீட்ரூட், வெள்ளைப்பூண்டு, கீரைகள், இளநீர், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றிலும் பொட்டாசியம் சத்துக்கள் கிடைக்கின்றன.

கால்சியம்

இது, வலிமைமிக்க வலுவான எலும்புகள் உருவாக உதவுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை நோய் வரும் ஆபத்தைக் குறைக்கிறது.

கால்சியம் நிறைந்த உணவுகள்

பால், தயிர், மத்தி மீன், சீஸ், கடல் சிப்பி, பாதாம், இறால், எள், ஆரஞ்சு, சாலமன் மீன், ஓட்ஸ் போன்றவற்றில் கால்சியம் நிறைந்துள்ளன.

விட்டமின் ஏ

இந்த ஊட்டச்சத்து கண்பார்வை, குறிப்பாக, இரவு நேரப்பார்வை, தோல், ஈறு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது, நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும், வைரஸ்களுக்கு எதிராக போராடவும் உதவுகிறது.

வயது அதிகரித்தாலும், புலனுணர்வு செயல்பாட்டை பாதுகாக்க, அதிகளவில் விட்டமின் ஏ தேவைப்படுகிறது.

விட்டமின் ஏ உணவுகள்

ஆரஞ்சு, முட்டை, பால் உணவுகள், இறைச்சி, கேரட் மற்றும் பச்சை காய்கறிகளில் விட்டமின் ஏ வின் சத்து மிகுதியாக கிடைக்கும்.

மக்னீசியம்

மக்னீசியம் உடலில் நடக்கும், நூற்றுக்கணக்கான ரசாயன மாற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மரபணுக்கள் சரியாக வேலை செய்ய, ஆற்றலை சேமித்து கொடுத்து உதவுகிறது. இது, எலும்புகள் வலிமையுடன் இருக்கவும், நரம்புகள் மற்றும் தசைகள் தொய்வில்லாமல், நயத்துடன் பராமரிக்கவும், ரத்தம் தடையில்லாமல், சீராக உடல் முழுவதும் பாயவும் உதவுகிறது.

இந்த தாது, பரிந்துரைக்கப்பட்ட, 38 சதவீதம் கிடைக்கப்பெற்றால், வளர்சிதை மாற்ற நோய் அறிகுறி தவிர்க்கப்படுமாம். இதை, மருத்துவ ஆய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதிக வயிற்று கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்துகள் கட்டுக்குள் இருக்கும்.

மக்னீசியம் நிறைந்த உணவுகள்

மீன், நட்ஸ், அவகேடா, வாழைப்பழம், உலர்திராட்சை, டார்க் சொக்லேட், பீன்ஸ் போன்றவற்றில் மிகுதியாக கிடைக்கின்றன.

Loading...
Rates : 0
VTST BN