ஹனி-பாதாம் மிக்ஸ் | Tamil Serial Today Org

ஹனி-பாதாம் மிக்ஸ்

ads 1

ஹனி-பாதாம் மிக்ஸ்பால் – 2 கப்
பாதாம் – 10
பிஸ்தா ‍- 5 (விரும்பினால்)
முந்திரி – 6
தேன் – 3 மேசைக்கரண்டி
வேர்க்கடலை – ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

பாலை பத்து நிமிடங்களுக்கு நன்றாகக் காய்ச்சவும்.

பாதாமை கால் கப் கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு எடுத்து தோல் நீக்கவும். அதில் பாதி பாதாமை பொடியாக நறுக்கி வைக்கவும்.

மீதி பாதாம், பிஸ்தா, முந்திரி, சர்க்கரை, வறுத்த வேர்க்கடலை, தேன் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.

அரைத்த விழுதை எடுத்து பாலில் சேர்த்து கலக்கவும்.

இந்தக் கலவையில் குங்குமப்பூ சேர்க்கவும்.

இதில் நறுக்கிய பாதாமை மேலே தூவி, சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11