ஸ்டஃப்டு முள்ளங்கி சப்பாத்தி

Loading...

ஸ்டஃப்டு முள்ளங்கி சப்பாத்திகோதுமை மாவு – அரை கப்
துருவிய முள்ளங்கி – அரை கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முள்ளங்கியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கிவிட்டு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், உப்பு போட்டு 30 நொடிகள் வதக்கவும்.

அதனுடன் ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவில் ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வட்டமாக தேய்த்து, அதன் மேல் முள்ளங்கி மசாலாவை வைக்கவும்.

மசாலா வெளியில் வராதபடி மடித்துக் கொள்ளவும்.

மடித்த சப்பாத்தியை வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் சப்பாத்தியைப் போட்டு மேலே எண்ணெய் ஊற்றி, இருபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான ஸ்டஃப்டு முள்ளங்கி சப்பாத்தி தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply