வெற்றிலை நெல்லி ரசம்

Loading...

வெற்றிலை நெல்லி ரசம்குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்:

முழு நெல்லிக்காய் – 10,
வெற்றிலை – 20,
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி,
காய்ந்த மிளகாய் – 4,
பூண்டு – 6 பல்,
வால் மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

* காய்ந்த மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும்.

* கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* வெறும் சட்டியில் காய்ந்த மிளகாய், பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும்.

* பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

* ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.

* அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

* இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply