வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Loading...

வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
நல்லெண்ணெய்யில் கனிமச்சத்துகள், விட்டமின் ஈ, விட்டமின் பி6, மன்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளன.

அதுவும், நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

1.குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

2.நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

3.உடல் சூட்டை தணிக்கும்.

4.நல்லெண்ணெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

5.ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

6.இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

7.நல்லெண்ணெய்யில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும்.
இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply