வெஜிடபிள் உருண்டை

Loading...

வெஜிடபிள் உருண்டைதேவையான பொருட்கள்:

அரிசி – 2 கப்,
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப்,
வெங்காயம் – 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
தேங்காய் துருவல் – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 3,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு ஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து வைக்கவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்சை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து… பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

• பிறகு, கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

• இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக செய்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

• இப்போது சுவையான சத்தான வெஜிடபிள் உருண்டை ரெடி.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply