வாழைத்தண்டு – பார்லி சூப்

Loading...

வாழைத்தண்டு – பார்லி சூப்தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு – 1
பார்லி -50 கிராம்
தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது -1டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
அரிசி-1 கைப்பிடி
து. பருப்பு-சிறிதளவு
நெய்-1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் உப்பு-தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
• கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வாழைத் தண்டை நார் எடுத்து சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
• வெட்டிய வாழைத்தண்டுடன் அரிசி, பருப்பு, பார்லி தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள்.
• வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.
• நெய்யில் காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கிக் அதில் வேக வைத்து வடித்து வைத்திருக்கும் நீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள்.
• கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான கொத்தமல்லி தழை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறுங்கள்.

Loading...
Rates : 0
VTST BN