வாட்ஸ் அப் அபாயம் – எச்சரிக்கை உங்கள் அந்தரங்கங்களும் அவுட் ஆகலாம்.! | Tamil Serial Today Org

வாட்ஸ் அப் அபாயம் – எச்சரிக்கை உங்கள் அந்தரங்கங்களும் அவுட் ஆகலாம்.!

Loading...

வாட்ஸ் அப் அபாயம் - எச்சரிக்கை உங்கள் அந்தரங்கங்களும் அவுட் ஆகலாம்.!வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரகசியமாகப்பதிவு செய்யப்படுகின்றன என்றும், அவை என்றாவது ஒரு நாள் திருடப்பட்டு வெளியில் கசியவிடப்படும் என்றும் செக்கோஸ்லாவாகியா நாட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் நமது அலைபேசி எண்ணுடன், இதன் அழைப்புகளையும் பதிவு செய்து தமது கணிப்பொறிகளில் சேமித்துக்கொள்கின்றது. ஆகவே, இது ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால் நமது ரகசியம் எளிதில் வெளியே கசியலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தக்கணினிகள் பாதுகாப்பு மிகுந்ததாகத்தான் இருக்கும் என்றாலும், ஒரு வேளை ஹேக்கிங் செய்யப்பட்டால், வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் வெளியேறாமல் இருக்க ஆண்ட்ராய்ட் போன்களிலிருந்து வாட்ஸ்அப் சர்வர்களில் சேமிக்கப்படும் போது அதை ரகசிய மொழியாக மாற்றி பாதுகாக்க ஒரு பிரத்யேக டூலை இந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆகவே, இந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த சாதனத்துடன், முழு நெட்வொர்க் டிராபிக்கும் தேவை எனவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது பாதுகாப்பு இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர். இப்போதைக்கு வாட்ஸ்அப் குறிப்புகள் பத்திரமாகவே உள்ளன. இதே போல மக்களின் பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு சமூக தளங்களையும் ஆய்வு செய்தால் தான் அவற்றின் உண்மை நிலை தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. இது இணையவாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN