வயசு ஆயிட்டாலும், இளமையா இருக்க வேண்டுமா!

Loading...

வயசு ஆயிட்டாலும், இளமையா இருக்க வேண்டுமா!இன்றைய காலத்தில் என்ன தான் வயது ஆகிவிட்டாலும், ஆகாவிட்டாலும் விரைவில் வயது முதிர்ந்த தோற்றம் மட்டும் வந்துவிடுகிறது. அத்தகைய தோற்றத்தை போக்க கடைகளில் பல கிரீம்கள் விற்கப்படுகின்றன. அந்த கிரீம்களை வாங்கி முகத்திற்கு போடுவதால் முகத்தில் இருக்கும் அந்த தோற்றம் போவதை விட, அவை மேலும் அதிகமான அளவு வயது முதிர்ந்த தோற்றத்தை தருவதே அதிகம். ஏனெனில் அந்த கிரீம்களில் இருக்கும் கெமிக்கல்கள் சருமத்தை அதிகம் பாதிக்கிறது. ஆகவே அத்தகைய பாதிப்பு சருமத்திற்கு ஏற்படாமல் இருக்க வீட்டில் இருந்தே அந்த சருமத்திற்கு கிரீம்கள் தயாரித்து பயன்படுத்தலாம்.
வயதான சருமத்தை போக்க…
* காலெண்டுலா மலரின் இதழ்களை காய வைத்து, அதனை சூடான நீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும். தேன் மெழுகை உருக வைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது காலெண்டுலா எண்ணெயை ஊற்றி நன்கு காய வைத்து, அதில் காலெண்டுல்லா தண்ணீர் மற்றும் தேன் மெழுகை ஊற்றி, சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலக்க வேண்டும். பிறகு அதனை ஒரு காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு, தினமும் அதனை படுக்கும் முன் தடவி, சற்று நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், சருமம் இறுக்கமடைவதுடன், நன்கு அழகாகவும் மாறும்.
* அவோகேடோ பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் முட்டையை கலந்து, அதனை தடவி நன்கு மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக அந்த கலவையை முகத்திற்க தடவி காய வைக்கும் போது, பேசவோ அல்லது சிரிக்கவோ கூடாது. இத்னை வாரத்திற்கு இரு முறை செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
* ஆப்பிள் மற்றும் அன்னாசிப்பழம் ஒரு சிறந்த ஆன்டி-ஏஜிங் பழங்கள். அதற்கு ஆப்பிள் மற்றும் அன்னாசியை நன்கு நைஸாக மென்மையாக மசித்துக் கொள்ளவும். பின் அதில் சிறிது பாலை விட்டு, சற்று கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதை தினமும் காலையில் குளிப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும். இந்த கலவையை 2-4 நாட்கள் வைத்து கூட பயன்படுத்தலாம். வேண்டுமென்றால் அதில் சிறிது தேனை கலந்து கொள்ளலாம். ஏனெனில் தேன் சருமத்தை சற்று இறுக்கமடையச் செய்யும்.
* சுருக்கத்தை போக்க இது ஒரு சிறந்த மற்றும் ஈஸியான ஆன்டி-ஏஜிங் கிரீம். அதற்கு தேன், தயிர் மற்றும் பாலை ஒரு பௌலில் ஊற்றி, அந்த கலவையை முகத்திற்கு தடவி, மென்மையாக மசாஜ் செய்து, ஒரு 10 நிமிடம் காய வைத்து, பின்பு அதனை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். குளிர்ந்த தண்ணீர் முகத்தில் இருக்கும நுண் துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதாக நீக்கும் தன்மையுடையது.
இத்தகைய இயற்கையான ஆன்டி-ஏஜிங் கிரீம்களை பயன்படுத்தி, முகத்தில் இருக்கும் வயதான தோற்றத்தை நீக்கலாம். மேலும் வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த கிரீம்களை காய வைக்காமல் சற்று ஈரப்பசை இருக்கும் போதே கழுவி விட வேண்டும். அதிலும் அந்த கிரீம்களை குளிர்ச்சியான இடத்தில் வைத்து சேமிக்க வேண்டும். முக்கியமாக தினமும் அதிகமான அளவு தண்ணீரை குடித்தால், சருமம் அழகாக இருப்பதோடு, பளபளப்பாகவும், சுருக்கங்கள் எளிதில் வராமலும் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply