லெமன் ஓட்ஸ்

Loading...

லெமன் ஓட்ஸ்தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 1 கப்,
தண்ணீர் – 3/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
வேர்கடலை – கைப்பிடியளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1/2 tsps
பச்சை மிளகாய் – 2,
சிகப்பு மிளகாய் – 1,
கறிவேப்பிலை – 1 இணுக்கு
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

• செய்முறை :

ஓட்ஸ், வேர்க்கடலையை சிறிது வறுத்து கொள்ளவும்.

• ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, ப.மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்த பின் 3/4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

• அடுத்து அதில் ஓட்ஸ் சேர்த்து தீயை மிதமான தீயில் வைத்து 4 நிமிடம் மூடி வேக வைக்கவும்.

• அடுத்து எலுமிச்சை சாறு ஊற்றி மறுபடியும் 4 நிமிடம் மூடி வைக்கவும்.

• 4 நிமிடம் ஆனவுடம் வேர்க்கடலையை தூவி இறக்கவும்.

• காலை நேர டிபனுக்கு மிகவும் உகந்த டயட் உணவாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply