ராகி புட்டு

Loading...

ராகி புட்டுநாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருந்தால், நம்மை எந்த நோயும் அணுகாது. அந்த
வரிசையில் இன்று நாம் பார்க்க‍விருப்ப‍து ராகி புட்டு.
தேவையான பொருள்கள் –
ராகி மாவு – 1 கப் ( 200 கிராம் )
சீனி ( சர்க்கரை ) – 100 கிராம்
தேங்காய் துருவல் – 100 கிராம்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 200 மில்லி
உப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை –
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ராகி மாவைப் போட்டு லேசாக வறுத்து சிறிதுநேரம் ஆறவிடவும். 200 மில்லி தண்ணீரை லேசாக சூடு பண்ணவும். மாவு நன்றாக ஆறியதும் மாவுடன் உப்பு, எலக்காய்தூள் சேர்த்து கிளறி வைக்கவும். பிறகு சுடு தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கிளறவும். 15நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் மிக்ஸ்சியில்போட் டு ஒருசுற்று சுற்றிஎடுக்கவும். மிக்ஸ்சியில்போட்டு எடுப்பதால் மாவுகட்டி விழாது. பிறகு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலக்கவு ம்.

கலக்கி வைத்துள்ள மாவை இட்லி தட்டில் பரப்பி வைக்கவும். சர்க்க‌ரை யை மிக்ஸ்சியில் பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி புட்டு வைத்துள்ள இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக் கவும். புட்டு 10 நிமிடங்களில் வெந்து விடும். புட்டு வெந்ததும் எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும். பிறகு அதனுடன் பொடித்து வைத்து ள்ள சீனியை சேர்த்து நன்றாக கலக்கி சூடாக பரிமாறவும். சுவையான ராகி புட்டு ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply