ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

Loading...

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்தேவையான பொருட்கள்

ராகி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – ஒன்றரை கப்
வெனிலா ஐஸ்க்ரீம் – தேவைக்கு
காய்ச்சி ஆற வைத்த பால் – தேவைக்கு
சாக்லேட் தூள் – ஒரு தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள்

செய்முறை :

• ராகி மாவை வெறும் வானெலியில் சிறு தீயில் பச்சை வாசம் போக வறுக்கவும்… நன்றாக ஆற விடவும்… ஆற வைத்த வறுத்த ராகி மாவை அரை கப் நீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.

• ஒரு கப் தண்ணீரை கொதிக்க விடவும், அதில் கரைத்த ராகியை ஊற்றி, கிளறவும். மிதமான தீயில் வேக வைக்கவும். அடி பிடிக்காமல் கிளறவும். ராகி கூழ் நன்றாக கெட்டிப் படும் போது இறக்கி ஆற வைக்கவும்…

• மிக்சியில் ராகி கூழ், பால், வெனிலா ஐஸ்க்ரீம், சாக்லேட் தூள் ஐஸ் கட்டிகள் சேர்த்து, நுரை பொங்க அடிக்கவும்…

• குழந்தைகளுக்கு மேலே சிறிது ஐஸ்க்ரீம் வைத்து பருக கொடுக்கவும்…

• 100 சாக்லேட் தூள் அல்லது டிரிங்கிங் சாக்லேட் தூள் சேர்த்தும் இதே முறையில் சேர்க்கலாம்… இனிப்புக்கு தேவையானால் பேரிச்சை சேர்த்தும் அடிக்கலாம்…

Loading...
Rates : 0
Loading...
VTST BN