மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்

Loading...

மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்40 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 4, 1975-ம் ஆண்டு சியேட்டிலில் உள்ள லேக்ஸைடு பள்ளியில் படித்து வந்த நண்பர்களான பில்கேட்ஸ், பால் ஆலன் ஆகியோர் கூட்டணியில் உருவானதே மைக்ரோசாப்ட். அப்போது பில்கேட்ஸூக்கு வயது 19, ஆலனுக்கு வயது 22. 40 ஆண்டுகால பயணத்தில் உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமாக மைக்ரோசாப்ட் பல சாதனைகளை பதிவு செய்துள்ளது. அவை காலக்கோட்டின் அடிப்படையில் பின்வருமாறு:- 1975 – மைக்ரோசாப்ட் நிறுவப்பட்டது. ஜனவரி 1, 1979 – மைக்ரோசாப்ட் அல்பெர்க்குவிலிருந்து நியூ மெக்ஸிகோ, பெலிவியூ, வாஷிங்டனுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஜூன் 25, 1981 – சட்டப்படி மைக்ரோசாப்ட் கம்பெனியாக நிறுவப்பட்டது ஆகஸ்டு 12, 1981 – மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து 16-பிட் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் பர்சனல் கம்யூட்டரை MS-DOS 1.0 ஓ.எஸ்ஸில் ஐ.பி.எம். அறிமுகப்படுத்தியது. பிப்ரவரி 26, 1986 – மைக்ரோசாப்ட் வாஷிங்டனின் ரெட்மண்டிலுள்ள கார்ப்பரேட் கேம்பஸூக்கு மாற்றம் செய்யப்பட்டது. மார்ச் 13, 1986 – மைக்ரோசாப்டின் பங்குகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது. ஆகஸ்டு 1, 1989 – மைக்ரோசாப்ட் தனது முதல் ஆபிஸ் சூட் மென்பொருள் தொகுப்பினை வெளியிட்டது. மே 22, 1990 – மைக்ரோசாப்ட் விண்டோஸ் 3.0 ஓ.எஸ். வெளியிடப்பட்டது. ஆகஸ்டு 24, 1995 – மைக்ரோசாப்ட் விண்டோஸ் 95 இயங்குதளத்தை வெளியிட்டது. ஜூன் 25, 1998 – மைக்ரோசாப்ட் விண்டோஸ் 98 இயங்குதளத்தை வெளியிட்டது. ஜனவரி 13, 2000 – ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாப்டின் தலைவராக அறிவிக்கப்பட்டார். பிப்ரவரி 17, 2000 – மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000 இயங்குதளத்தை வெளியிட்டது. மே 31, 2001 – ஆபிஸ் எக்ஸ்.பி. மென்பொருட்கள் தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. அக்டோபர் 25, 2001 – மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்.பி. இயங்குதளத்தை வெளியிட்டது. நவம்பர் 15, 2001 – உலகுக்கு கணிணி விளையாட்டை பரவலாக கொண்டு வர உதவிய பிரபல எக்ஸ் பாக்ஸ் தொகுப்பை வெளியிட்டது மைக்ரோசாப்ட். நவம்பர் 7, 2002 – மைக்ரோசாப்ட் மற்றும் அதனது துணை நிறுவனங்கள் இணைந்து முதன்முதலில் டேப்லட் கம்யூட்டர்களை அறிமுகப்படுத்தியது. நவம்பர் 22, 2005 – மைக்ரோசாப்ட் முந்தைய எக்ஸ் பாக்ஸ் தொகுப்பை மேம்படுத்தி Xbox 360-ஐ வெளியிட்டது. ஜனவரி 30, 2007 – விண்டோஸ் விஸ்டா மற்றும் 2007 எம்.எஸ்.ஆபிஸ் சிஸ்டத்தை உலகம் முழுவதும் வெளியிட்டது மைக்ரோசாப்ட். ஜூன் 27, 2008 – வழக்கமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்த பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையை கவனிக்க துவங்கினார். அக்டோபர் 22, 2009 – மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 இயங்குதளத்தை அறிமுகம் செய்தது. ஜூன் 15, 2010 – ஆபிஸ் 2010 மென்பொருள் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்க செய்தது. நவம்பர் 4, 2010 – மைக்ரோசாப்ட் Xbox 360 -க்காக Kinect தொகுப்பை உருவாக்கியது. நவம்பர் 10, 2010 – விண்டோஸ் போன்களுக்காக Windows Phone 7 இயங்குதளத்தை வெளியிட்டது. ஜூன் 28, 2011 – ஆபிஸ் 365 மென்பொருள் தொகுப்பு வெளியிடப்பட்டது. அக்டோபர் 13, 2011 – ஸ்கைப்-ஐ கையகப்படுத்தும் முடிவை நெருங்கியது. அக்டோபர் 26, 2012 – மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 மற்றும் Microsoft Surface இயங்குதளங்களை அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 29, 2012 – ஸ்மார்ட்போன்களுக்கான Windows Phone 8 இயங்குதளத்தை வெளியிட்டது மைக்ரோசாப்ட். ஜனவரி 29, 2013 – ஆபிஸ் 2013 மென்பொருள் தொகுப்பு வெளியிடப்பட்டது. பிப்ரவரி 18, 2013 – Outlook.com அறிமுகமானது. மே 21, 2013 – எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) அறிவித்தது. செப்டம்பர் 3, 2013 – நோக்கியாவை கையகப்படுத்தியது மைக்ரோசாப்ட். அக்டோபர் 17, 2013 – ஸ்மார்ட்போன்களுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தை வெளியிட்டது மைக்ரோசாப்ட். அக்டோபர் 22, 2013 – Surface 2 மற்றும் Surface Pro 2 இயங்குதளங்களை அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட் நவம்பர் 22, 2013 – எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) அறிமுகம் செய்யப்பட்டது. பிப்ரவரி 4, 2014 – இந்தியாவை சேர்ந்த சத்தியா நாதெல்லா மைக்ரோசாப்ட்டின் சி.இ.ஓ.வாக அறிவிக்கப்பட்டார். மார்ச் 27, 2014 – ஐ.பேடுக்கு ஆபிஸ் மென்பொருள் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. ஜூன் 20, 2014 – Surface Pro 3 அறிமுகம் செய்யப்பட்டது. செப்டம்பர் 15, 2014 – Minecraft நிறுவனம் மைக்ரோசாப்ட்டுடன் இணைந்தது. நவம்பர் 6, 2014 – ஆன்ட்ராய்டு டேப்லட்டுகளுக்கு Office apps -ஐ அறிவித்தது மைக்ரோசாப்ட் நவம்பர் 21, 2015 – மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியீடு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply