மென்மையான உதடுகள் வேண்டுமா!!!

Loading...

மென்மையான உதடுகள் வேண்டுமா!!!முகத்திற்கு அழகைத் தருவதில் உதட்டிற்கும் பெரும்பங்கு உண்டு. அதற்காக அனைவருமே நமது உதடுகள் நன்கு மென்மையாக, பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் உதடுகள் சிலருக்கு வறண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு, அழகாக இருக்கும் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். ஆகவே அவர்கள் மென்மையான உதட்டை பெற முடியாமல், முகத்திற்கு மேக்கப் செய்து, உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டு அழகுப்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு கஷ்டப்பட்டு மேக்கப் போடும் பெண்களுக்கு ஒரு சிறந்த, உதட்டை மென்மையாக்க வீட்டிலேயே இருக்கும் ஒருசில பொருட்களை வைத்து, உதட்டை மென்மையாக பராமரிக்கலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
* தினமும் காலையில் பற்களை துலக்கியப் பின், சிறிது பேக்கிங் சோடாவை வைத்து, உதட்டின் மீது, மென்மையாக தேய்த்து வந்தால், உதடுகள் வறட்சியடையாமல், மென்மையாக இருக்கும்.
* உதட்டில் சிறிது தேன் அல்லது ஆமணக்கெண்ணெயை தேய்த்து வந்தால், உதடுகள் எப்போதும் ஈரப்பசையுடன் காணப்படும்.
* வறட்சியின் காரணமாக இரவில் படுக்கும் முன் வாஸ்லினை சிலர் தடவுவார்கள். ஆனால் அவ்வாறு வாஸ்லினை தடவும் முன் அன்னாசிப்பழ ஜூஸை தடவி, பின்னர் வாஸ்லினைத் தடவ வேண்டும்.
* கிரீன் டீ செய்து குடித்தப் பின்னர், அதில் இருக்கும் இலையை உதட்டில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் கழுவினால், உதடுகள் எப்போதும் வறட்சியடையாமல் இருக்கும்.
* உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்க, ஆலிவ் எண்ணெயுடன், சர்க்கரையை கலந்து, அதனை உதட்டில் தடவி, சிறிது நேரம் தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து 1 அல்லது 2 வாரங்கள் தொடர்ந்து செய்யலாம் அல்லது எப்போது உதடுகள் வறட்சியடையாமல் இருக்கிறதோ, அப்போது அதனை செய்யாமல் விடலாம்.
* தக்காளியின் பேஸ்ட்டை, மில்க் கிரீமுடன் கலந்து உதட்டிற்கு தடவினால், உதடுகள் மென்மையாவதோடு, பிங்க் நிறத்தையும் அடையும்.
* உதடுகள் பிங்க் நிறத்தில் வேண்டுமென்றால், ரோஸ் இதழ்களை, மில்க் கிரீமுடன் கலந்து தடவினால், உதடுகளுக்கு எப்போதும் லிப்ஸ்டிக் போட்டது போல் காணப்படும்.
* பாதாமை நன்கு பேஸ்ட் செய்து அதனை உதட்டிற்கு தடவி வந்தாலும் உதடுகள் மென்மையடையும்.
* ஈரப்பதமான உதட்டைப் பெற, தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு மற்றும் தேன் மெழுகை ஊற்றி காய வைத்து, அதனை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு, அந்த கலவையை தடவினால், உதடுகள் மென்மையாக இருக்கும்.
* முக்கியமாக தினமும் 8-10 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் தண்ணீர் குறைவாக இருப்பதால் தான் உதடுகள் வறட்சியை அடைகின்றன. மேலும் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் நன்கு உண்ண வேண்டும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply