மெனோபாஸ் காலகட்டத்தில் வரும் தூக்கமின்மை

Loading...

மெனோபாஸ் காலகட்டத்தில் வரும் தூக்கமின்மைமாதவிலக்கு என்பதை ஒரு சுமையாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள், அது நின்று போனதும், ஏதோ தன் பெண்மையே தன்னிடமிருந்து பறி போன மாதிரி உணர்வார்கள். கணவர் தன்னை விட்டு ஒதுங்கி விடுவாரோ என்பது போன்ற தேவையற்ற பயங்கள் தலைதூக்கும்.

அளவுக்கு அதிக ரத்தப்போக்கு அல்லது அவ்வப்போது தென்படுகிற குறைந்த அளவு ரத்தப்போக்கு, மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வருகிற ரத்தப்போக்கு, வேலையே செய்யாத போதும் அசதி, கை, கால் வலி, குடைச்சல், எலும்புத்தேய்மானம், மயக்கம், அதிக வியர்வை, உடல் சூடாவது என நிறைய மாற்றங்களை உணர்வார்கள். இந்த அத்தனை அறிகுறிகளின் உச்சக்கட்டமாக தூக்கம் ஒரேயடியாக பறிபோகும்.

தூக்கமே இல்லாதது, தூக்கத்தில் திடுக்கிட்டு விழிப்பது, மறுபடி தூக்கத்துக்குள் போக முடியாதது என ஆழ்ந்த, அமைதியான தூக்கம் என்பது இவர்களிடமிருந்து விடைபெறும். தூக்கமில்லாவிட்டால் எந்த மனிதரின் மனநிலையும் மிருகத் தன்மை கொள்ளும். மெனோபாஸ் நெருங்குவதற்கு முன்பிருந்தே சில விஷயங்களை முறையாகப் பின்பற்றினால், வரப் போகிற பிரச்னைகளில் இருந்து ஓரளவு தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். தூக்க முறையும் ஒழுங்குபடும். இரவில் தினமும் குளித்துவிட்டு, தளர்வான உடை அணிந்து படுக்கவும்.

ஒரு மஸ்லின் துணியில் 4 சொட்டுகள் ஃபிரான்கின்சென்ஸ் ஆயில், 4 சொட்டுகள் லேவண்டர் ஆயில், 4 சொட்டுகள் லெமன் கிராஸ் ஆயில் மூன்றையும் தெளித்து, உங்கள் தலையணை உறைக்குள் வைத்துக் கொள்ளவும். பத்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு, இரண்டு கால் கட்டை விரல்களையும் 50 முறைகள் அழுத்திப் பிடித்து விட்டுப் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

இதில் லேவண்டர் ஆயிலுக்கு பயத்தையும் பதற்றத்தையும் போக்கும் தன்மை உண்டு. ஃபிரான்கின்சென்ஸ் ஆயிலானது மனதை அமைதிப்படுத்தும். லெமன் கிராஸ் ஆயில் மூளையைப் புத்துணர்வுடன் வைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply