முட்டை பணியார குழம்பு

Loading...

முட்டை பணியார குழம்புதேவையான பொருட்கள்:

•முட்டை – 4

•வெங்காயம் – 2

•பச்சை மிளகாய் – ஒன்று

•சிறிய வெங்காயம் – 6

•தக்காளி – ஒன்று

•மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி

•கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி

•கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு

•அரைக்க :

•தேங்காய் – அரை மூடி

•சோம்பு – ஒரு தேக்கரண்டி

•கசகசா – ஒரு தேக்கரண்டி

•முந்திரி – 4

•இஞ்சி – சிறிது

•பூண்டு – 7 பல்

தயார் செய்யும் முறை:

மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து அடித்து வைக்கவும்.

குழிப்பணியார கல்லில் முட்டை கலவையை பணியாரமாக ஊற்றி எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, ஒரு பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளித்து கறிவேப்பிலை மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.

அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கலவை கொதித்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் முட்டை பணியாரத்தை சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.

சுவையான முட்டை பணியார குழம்பு தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply