முட்டை சாட்

Loading...

முட்டை சாட்தேவையான பொருட்கள் :

முட்டை – 4

வெங்காயம் – 1

தக்காளி – 1

ப.மிளகாய் – 1

புதினா சட்னி – 1 ஸ்பூன்

எலுமிச்சை பழம் – 1

ஓமப் பொடி – சிறிதளவு

சாட் மசாலா – சிறிதளவு

தனி மிளகாய் தூள் – சிறிதளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

மிளகு தூள் – 1 ஸ்பூன்

உப்பு – சுவைக்கு

செய்முறை :

• வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும்.

• முட்டை நன்றாக வேகவைத்து பாதியாக வெட்டி வைக்கவும்.

• முட்டையை தட்டின் மேல் வைத்து அதன் மேல் புதினா சட்னியை சிறிது போடவும்.

• பின்னர் அதன் மேல் வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், மிளகாய் தூள், சாட் மசாலா, மிளகு தூள், உப்பு, ஓமப் பொடி,

கொத்தமல்லி தழை மேலே போடவும்.

• கடைசியாக எலுமிச்சை சாறு தெளித்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply