முட்டை குழம்பு

Loading...

முட்டை குழம்புதேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை – 10
தக்காளி – 3 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
புளிச்சாறு – 1/2 கப்
தண்ணீர் – 1 கப்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
பூண்டு – 10 பற்கள்
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்குஸ
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாக வதங்கும் வரை வதக்க வேண்டும். பின்பு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும். இறுதியில் வேக வைத்துள்ள முட்டையில் ஆங்காங்கு கீறி விட்டு, வாணலியில் போட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஆந்திரா முட்டை குழம்பு ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply