மீன் பிரியாணி!

Loading...

மீன் பிரியாணி!மீன் பிரியாணி தேவையான பொருட்கள் மீன் – 1/4 கிலோ அரிசி – 2 ஆழாக்கு வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 150 கிராம் பச்சை மிளகாய் – 2 இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன் புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் தனியாத்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் தயிர் – 1 கப் உப்பு – தேவையான அளவு எண்ணை – 1/2 குழிக் கரன்டி செய்முறை * மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும், * வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும். * ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும். * வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். * தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். * பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும். * குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். * சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply