மீண்டும் பேய் படத்தில் மிரட்டும் நயன்தாரா

Loading...

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா.

தனது தனிப்பட்ட கசப்பான அனுபவங்களைத் தாண்டி இவரது இரண்டாவது இன்னிங்ஸ்தான் வெற்றிகரமான படங்களை அளித்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் தொடர் வெற்றியை பெற்றதன் மூலம் வெற்றி கதாநாயகியாக மாறியிருக்கிறார்.

தற்போது திருநாள், இது நம்ம ஆளு படங்கள் விரைவில் வெளியாக தயராகவுள்ளது,

மாயாவில் சோலோ ஹீரோயினாக தனது வெற்றிக்கொடி நாட்டிய நயன் தற்போது மீண்டும் ஒரு புதிய திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

களவாணி, சண்டிவீரன் படங்களை இயக்கிய சற்குணம் தயாரிக்கும் இப்படத்திலும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம்தானாம்.

சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இப்படத்தை இயக்கவுள்ளார். சந்திரமுகி, மாசு, மாயா, ஒரு மலையாள பேய் படத்தை தொடர்ந்து இது நயன்தாரா நடிக்கும் 5வது பேய் படமாம்.

 

மீண்டும் பேய் படத்தில் மிரட்டும் நயன்தாரா

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply