மிரோ எனும் பயன்பாட்டின் தகவல்கள் | Tamil Serial Today Org

மிரோ எனும் பயன்பாட்டின் தகவல்கள்

ads 1

மிரோ எனும் பயன்பாட்டின் தகவல்கள்நகலெடுத்து ஒட்டுவது மாற்றியமைப்பது போன்ற செயல்கள் எதுவும் இல்லாமலேயே தற்போது நாம் உபயோக படுத்திவரும் ஐட்யூன் எனும் பயன்பாட்டிலிருந்து மிக எளிதாக மிரோ எனும் பயன்பாட்டிற்கு மாறிவிடலாம்.
இது ஆண்ட்ராய்டு பயன்படுத்திடும் அல்லது செயல்படுத்திடும் செல்லிடத்து பேசிகளிலும் டேப்ளெட்களிலும் செயல்படும் திறன்மிக்கது.

அமோஸான், கூகுள் ஆகிய தளங்களிலிருந்து இசைகளை பதிவிறக்கம் செய்து இதில் இயக்கி கேட்டு மகிழலாம். அதுமட்டுமல்லாது, யூட்யூப், போட்காஸ்ட்ஸ், அமோஸான், பிட்டோரண்ட் போன்ற தளங்களிலுள்ள காணொளி காட்சிகளின் எந்தவகையான கோப்பாக இருந்தாலும் பதிவிறக்கம் செய்து இதன்வாயிலாக காட்சியாக கண்டு மகிழலாம்.

கூடுதலாக எந்தவொரு காணொளி காட்சிகளையும் இந்த மிரோவின் உதவியால் mp4/h264 ஆகிய எந்தவொரு கோப்பாகவும் மாற்றம் செய்து ஐபோன், ஐபேடு , ஆண்ட்ராய்டு பயன்படும் சாதனம் ஆகிய எந்தவொரு சாதனத்திலும் செயல்படும் வண்ணம் செய்துவிடமுடியும்.

இரு மிரோ பயன்படுத்திடும் சாதனங்கள் வொய்பி போன்ற ஒரே வலைபின்னலில் இணைந்திருக்கும் போது அவைகளுக்கிடையே இசை கோப்புகளையும் காணொளி கோப்புகளையும் பங்கிட்டுகொள்ளவும் பரிமாறிகொள்ளவும் முடியும்.

இந்த பயன்பாடானது பிட்டோரண்ட் வாயிலாக இணையத்திலிருந்து இசைகோப்புகளையும் கானொளி கோப்புகளையும் மிகவிரைவாக பதிவிறக்கம்செய்து பயன்படுத்திகொள்ள அனுமதிக்கின்றது.

இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருளாகும் இதில் இன்னும் ஏராளமான பல்வேறு வசதிகளும் வாய்ப்புகளும் உள்ளன. இவ்வாறான மிர்ரோவிலிருந்து ஐபேடிற்கு இசைக் கோப்புகளையும் காணொளிக் கோப்புகளையும் மாற்றியமைத்திடவும் பரிமாறிக்கொள்ளவும், இயக்கிடுவதற்கும் மேலும் விவரங்களை அறிந்துக்கொள்ள http://www.getmiro.com/#sthash.LykuSV1f.dpuf எனும்இணைய பக்கத்திற்கு செல்க.

எந்தவொரு வகையான இசை கோப்பாக கானொளி காட்சிகளின் கோப்பாக இருந்தாலும் மாற்றியமைத்திடவோ நகலெடுத்திடவோ செய்திடாமல் இந்த மிர்ரோ எனும் பயன்பாட்டில் நேரடியாககொண்டு வந்து சேர்த்து செயல்படுத்திடமுடியும்.

நம்மால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இசைகளின் காணொளி காட்சிகளின் இணைய தளங்களின் முகவரிகளை உருவப்பொத்தான்களாக இதனுடைய பக்கபட்டையில் விருப்ப பக்கமாக சேர்த்து வைத்து தேவைப்படும்போது அதனை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்.

இதன்மூலம் வளாக பினையத்தின் வாயிலாக கணினிகளுக்கிடையே இசை கோப்புகளையும் காணொளி கோப்புகளையும் மாற்றியமைத்திடவும் பரிமாறிகொள்ளவும், இயக்கிடுவதற்கும் முடியும்.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11