மாங்காய் – இஞ்சி ஊறுகாய்

Loading...

மாங்காய் - இஞ்சி ஊறுகாய்தேவையானப் பொருட்கள்:-

மாங்காய் இஞ்சி – தலா கால் கிலோ
பச்சை மிளகாய் – 3
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
எலுமிச்சம்பழம் – 2

செய்முறை:-

• மாங்காய், இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவிக் கொண்டு, சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• ஒரு வாணலியில் தாளிக்கத் தேவையான அளவு நல்லெண்ணெயை விட்டு, அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.

• அடுத்து பெருங்காயத்தூளை சேர்த்து பொரிந்ததும் அடுப்பை நிறுத்தி வைத்த மாங்காய், இஞ்சியை சேர்க்கவும்.

• தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து நன்கு கலந்து விடவும்.

• உடனடி ஊறுகாய் தயார். இதை தயிர் சாதத்துடனோ உப்புமா போன்றவற்றுடனும் தொட்டுக் கொள்ள ஏற்ற ஜோடி. குளிர்சாதனப் பெட்டியில் பத்து நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply