மழைக் காலத்திற்கு ஏற்ற சூப்பரான உணவுகள்

Loading...

மழைக் காலத்திற்கு ஏற்ற சூப்பரான உணவுகள்கோடை காலத்தை விட மழைக்காலங்களில் அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம்.

ஏனெனில் வைரஸ், பாக்டீரியாக்கள் மூலம் நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

இதற்கு ஏற்றாற் போல் நமது உடலிலும் நோய் எதிர்ப்பு சக்திகள் இருந்தால் மட்டுமே, நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கலாம்.

கேரட்

கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ சளி, இருமல் உட்பட பல்வேறு தொற்றுநோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

க்ரீன் டீ

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் உடலை பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது. எனவே ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை க்ரீன் டீ குடிக்கலாம்.

தேன்

மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்னைகளுக்கு தீர்வான மிக எளிய உணவு தேன், இதில் உள்ள ஆண்டி பாக்டீரியா குணம் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது.

காளான்

இயற்கையாகவே உடலில் கிருமிகளை கொல்லும் திறன் கொண்ட காளானை, உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

பூண்டு

கல்லீரல் சார்ந்த பிரச்னைகளுக்கு மருந்தான பூண்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.

அதுமட்டுமின்றி வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கும் மருந்தாகிறது, எனவே வெறுமனே மென்று சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply