மலச்சிக்கல், வயிற்று புண் குணப்படுத்தும் நீர்முள்ளி

Loading...

மலச்சிக்கல், வயிற்று புண் குணப்படுத்தும் நீர்முள்ளிஇது இந்தியா முழுவதும் நீர் தேங்கியுள்ள வயல் வரப்புகளிலும், சிறு குளங்கள், குட்டைகள், ஆற்றோரங்களில் அதிகம் வளர்ந்து வரும் தாவரம். இதில் முட்கள் இருக்கும். ஊதா நிறத்தில் அழகான பூக்களைக் கொண்டிருக்கும். இதன் இலை விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

Tamil – Neermulli
English – Long leaved Barleria

என்று அழைக்கப்படுகிறது. இன்று பெரும்பாலானோருக்கு சிறுநீரகக் கல்லடைப்பு நோய் அதிகம் தாக்குகிறது. சிறுநீரகத்தில் உப்பு படிவம் சிறு கல்லாக மாறி அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

இப்படி சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்கு நீர்முள்ளி சிறந்த மருந்து. மலக்கட்டை உடைத்து மலச்சிக்கலை போக்கும் குணம் நீர்முள்ளிக்கு உண்டு. நீர்முள்ளியுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து இடித்து பொடித்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மாதவிலக்கு சீராக இல்லாத பெண்களும், வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகள் உள்ள பெண்களும் நீர்முள்ளி கஷாயம் செய்து அருந்தி வந்தால் இத்தகைய தொல்லையிலிருந்து விடுபடலாம்.

மன உளைச்சலாலும், உடல் சீர்கேட்டாலும் சிலருக்கு தாது நஷ்டம் ஏற்பட்டு விந்து சிறுநீருடன் வெளியேறும். இவர்கள் நீர்முள்ளி கஷாயத்தை அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். வாயுக்களின் சீற்றத்தினாலும் அஜீரணக் கோளாறினாலும் ஏற்படும் வயிற்றுப்புண் ஆற நீர்முள்ளி இலைகளை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply