மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும் இத்தி

Loading...

மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும் இத்திதாவரவியல் பெயர் : Ficus virens aiton
ஆலிலை வடிவில் சிறிய இலைகளை உடைய மரம். சாறு பால் போன்று இருக்கும். இச்சி என்றும் அழைக்கப்படும். மரப்பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கல், தாதுப் பெருக்கம் ஆகியவை இதன் மருத்துவப் பயன்கள்.
1. 100 கிராம் இத்திக்காயை ஒன்றிரண்டாய் இடத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராக வற்றக் காய்ச்சிப் பிசைந்து வடிகட்டிக் காலையில் சாப்பிட மலம் தாராளமாகப் போகும்.
2. இத்திப் பிஞ்சு 25 கிராம் அதிகாலையில் மென்று தின்ன அதிசாரம், பேதி, கிராணி, உள்ளுறுப்புப் புண்கள் ஆறும்.
3. 100கிராம் இத்திப் பட்டையை ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை பாதிப் பாதியாகக் குடிக்க அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.
4. இத்திக்காயை நெய்விட்டு வதக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply